பகவத் கீதை வெண்பா

நீடுலகி லெல்லார்க்கு நெஞ்சுக் கனுகுணமாப்
பாடுபெறு மிந்தப் பருஞ்சிரத்தை – நாடுஞ்
சிரத்தையுரு வாம்புருடன் சேர்ந்தே சிரத்தை
யுரத்ததெவற் காங்கவனா முற்று.         17.3

நீடுலகில் எல்லார்க்கும்

இப்பெரியவுலகில் எல்லா மனிதர்களுக்கும்

நெஞ்சுக்கு அனுகுணமா

( தம் ) மனத்திற்கு அனுகுணமாகவே

இந்த பரும் சிரத்தை பாடுபெறும்

பெரிதான இந்த சிரத்தை உண்டாகும்

புருடன்

இந்த மனிதன்

நாடும் சிரத்தை உருவாம்

தான் கொண்ட சிரத்தையின் பரிணாமமாகவே உள்ளான்

எவற்கு சிரத்தை சேர்ந்தே உரத்தது

எவனுக்கு (எந்த விதமான) சிரத்தை நெஞ்சில் உண்டாயிருக்கிறதோ

ஆங்கு அவனாம் உற்று

அவன் அந்த சிரத்தையின் பரிணாமமாகவே உள்ளான்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top