பகவத் கீதை வெண்பா

எவர்க்குந் தானுகப்பா மூணெச்ச மேய்ந்ததவ
மேவத் தகுதானம் வேறுபடப் – பாவுங்
குணந்தன்னான் மூவகையாக் கூறியவப் பேத
முணர்ந்திங்கே கேளிதனை யுற்று.         17.7

எவர்க்கும்

உயிருடைய எல்லாப் பொருள்களுக்கும்

ஊண்

உணவு

எச்சம்

யஜ்ஞம்

ஏய்ந்த தவம்

நன்கு அனுஷ்டிக்கப்படும் தவம்

மேவத்தகு தானம்

(சாஸ்திரங்களில்) அனுஷ்டிக்கத்தக்கதாகச் சொல்லப்படும் தானம் ஆகிய ஒவ்வொன்றும்

வேறுபடப் பாவும் குணம் தன்னால்

(ஸத்வாதிகளில் மூன்றில் ஒன்று மிகுதியாயிருக்கும்படி) வெவ்வேறாகப் பரவியிருக்கும் குணத்தையிட்டு (மூவகைப் பட்டதே)

தான் உகப்பாம்

(ஒவ்வொருவருக்கு ஒன்று) இனியதாகிறது

மூவகையாக் கூறிய அப்பேதம் இங்கே உணர்ந்து

மூன்றுவகைப் பட்டதாக (சாஸ்திரங்களில்) கூறப்பட்ட அந்த வேறுபாட்டை இப்போது (நான்சொல்ல) அறிந்து

இதனை

இந்த வேறுபாட்டை

உற்று கேள்

கவனமாகக் கேட்பாயாக.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top