பகவத் கீதை வெண்பா செய்யுங் கருமமெல்லாஞ் சித்திக்க நீவிசையா வுய்யு மதியறுதி யுற்றுணர்ந்த – வைவகைசேர் காரணங்க ளென்பாற் கருத்தமர்ந்து கேட்டறிநீ யாரணங்கள் சொல்லு மது. 18.13 விசையா அர்ஜுனா! ஆரணங்கள் சொல்லுமது வேதங்களால் சொல்லப்படுவதாய் உய்யும்மதி அறுதி உய்விக்கச்செய்வதான அறிவினால் தேறும் நிர்ணயத்தில் நீ செய்யும் கருமமெல்லாம் சித்திக்க (ஜீவனான ) நீ செய்யும் கர்மங்கள் அனைத்தும் உண்டாவதற்கு உற்று உணர்ந்த நன்கு அறியப்பட்ட ஐவகை சேர் காரணங்கள் ஐந்து வகைப்பட்ட காரணங்களை என்பால் என்னிடம் நீ நீ கருத்து அமர்ந்து கவனத்துடன் கேட்டு அறி கேட்டு அறிவாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0