பகவத் கீதை வெண்பா

அக்க வியலறமு மல்லறமுங் காரியமு
மிக்க வகாரியமு மேலச்சந்- தக்கவரு
மஞ்சாமை பந்தம் வீ டான்றறியும் புந்திதா
னெஞ்சா முதற்குணத்தா மிங்கு.        18.30

அக்க இயலறமும்

இவ்வுலகச் செல்வங்களுக்கு ஸாதநமான தர்மத்தையும்

அல் அறமும்

இவ்வுலகச் செல்வங்களிலிருந்து வேறுபட்ட மோக்ஷத்திற்கு ஸாதநமான தர்மத்தையும்

மிக்க காரியமும் அகாரியமும்

(இந்த தர்மங்களில் ஊன்றி நிற்பவர்களுக்கு) அவசியம் செய்யத்தக்கவையும் செய்யத்தகாதவையும்

மேல்

அதற்கு மேலே

தக்கவரும் அச்சம் அஞ்சாமை

பயத்துக்கும் பயமின்மைக்கும் இடமாயிருக்கத் தகுதியுள்ளவற்றையும்

பந்தம் வீடு

ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவது அதிலிருந்து விடுபடுவது ஆகியவைபற்றிய உண்மையையும்

ஆன்று அற யும் புந்திதான்

நன்கு அறியும் புத்தியானது

நெஞ்சாம் முதல் குணத்து ஆம்

மனத்தில் உண்டான ஸத்வகுணத்தால் விளைவது.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top