பகவத் கீதை வெண்பா மன்னு முறக்கம் பயஞ்சோகம் வாட்டமதந் துன்னுமிவை யித்தனையுந் துன்மதியான் – மன்னி யிடைவிடா தேமருவு மித்திருதி பார்த்தா கடையிலா குங்குணத்தின் காழ்ப்பு. 18.35 பார்த்தா குந்தீபுத்திரனே! துன்மதியான் தீய அறிவுள்ள ஒருவன் மன்னும் உறக்கம் மதம் வந்து சேரும் கனவு தூக்கம் மதம் ஆகியவற்றை விளைக்கும் மனம் பிராணன் முதலானவற்றின் செயல்கள் பயம் சோகம் வாட்டம் அச்சம் வருத்தம் கவலை ஆகியவற்றை விளைக்கும் விஷயங்களுக்குக் காரணமான மனம் பிராணன் முதலானவற்றின் செயல்கள் துன்னும் இவை இத்தனையும் (என்று) நெருங்கியிருக்கும் இவையனைத்தையும் மன்னி சேர்ந்து இடைவிடாதே மருவும் இத்திருதி எப்போதும் தரித்திருக்கும் இந்த த்ருதி கடையில் ஆகும் குணத்தின் காழ்ப்பு கடைசிக்குணமான தமோகுணத்தினால் உண்டாகும் தீய தன்மையாகும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0