பகவத் கீதை வெண்பா

கூடப் பிறந்த கருமங் குறையுறிலும்
வீடப் படாது விகல்விசையா – பீடுற்ற
வெல்லா முயற்றியையு மேய்ந்தெரியைத் தூமம்போற்
பொல்லாங்கு சூழும் புகுந்து.           18.48

விகல் விசையா

போரில் வல்ல அர்ஜுனா!

கூடப் பிறந்த கருமம்

இயல்வான கர்மயோகம்

குறையுறிலும்

குற்றமுள்ளதாயிருந்தாலும்

வீடப்படாது

கைவிடத்தகாதது

எரியைத தூமம் போல்

நெருப்பைப் புகை (சூழ்வது) போல்

பீடுற்ற எல்லா முயற்றியையும்

(மோக்ஷ ஸாதநமாயிருக்கும்) பெருமை பெற்ற கர்மயோகம் ஜ்ஞாநயோகம் ஆகிய எல்லாமுயற்சிகளையும்

பொல்லாங்கு

குற்றம்

ஏய்ந்து புகுந்து சூழும்

நெருங்கிப் பொருந்திச் சூழும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top