பகவத் கீதை வெண்பா தொன்மைப் பிரமவுயிர் தோன்றமன திற்றெளிந்துபுன்மைப் பலசோகம் பூணசையின் – றன்மையவித்தெப்பொருட்கு மொத்தென்பா லேய்ந்தபர பத்தியினைத்தப்பறவே சேருஞ் சமைந்து. 18.54 தொன்மைப்பிரமஉயிர் தோன்ற பிரம்மம் எனப்படும் அநாதியான தன் ஆத்மாவானது உள்ளபடி காட்சியளிக்க மனதில் தெளிந்து மனத்தில் கலக்கங்கள் அற்றவனாய் புன்மைப் பலசோகம் பூண் நசையின் தன்மை அவித்து (என்னைத்தவிர்ந்த வேறு பொருள்களைப் பற்றிய இழப்பினால் ஏற்படும்) பல வருத்தங்கள் (அவற்றின் சேர்த்தியினால் உண்டாகும்) பலவிருப்பங்கள் ஆகிய தாழ்வுகளைப்போக்கி எப் பொருட்கும் என்னைத் தவிர்ந்த அந்த எல்லாப் பொருட்களிலும் ஒத்து (பற்றற்று இருக்கையில்) ஒத்தவனாய் என் பால் ஏய்ந்த பரபத்தியினை என்னிடம் உண்டான பரபக்தியை தப்பறவே சமைந்து சேரும் குறைவில்லாமல் பரி பூர்ணமாக அடைவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0