பகவத் கீதை வெண்பா நெஞ்சாற் கருமமெல்லா நேராக வென்னிடைவைத் தெஞ்சாம லெற்பரனா யெந்நாளுந் – துஞ்சாத புத்தியோ கத்தைப் புணர்ந்து பொருவிலென்றன் பத்தியோ கமபெறு நீ பார்த்து. 18.57 நெஞ்சால் (என்னுடையவன் என்றும் என்னால் ஆளப்படுகிறவன் என்றும் அறிகின்ற) மனத்தைக் கொண்டு கருமம் எல்லாம் எல்லாக்கருமங்களையும் நேராக என்னிடை வைத்து நேரே என்னிடத்தில் ஸமர்ப்பித்து எஞ்சாமல் எற்பரனாய் என்னையே நிறைவான பலனாகக் கொண்டு எந்நாளும் துஞ்சாத எப்போதும் அழியாத புத்தியோகத்தைப் புணர்ந்து (முற்கூறிய) பரித்யாகங்களை உடையவனாய் பார்த்து ஆராய்ந்து நீ நீ பொருவில் என்தன் ஒப்பில்லாத என் விஷயமான பத்தியோகம் பெறு பக்தியோகத்தை அடைவாயாக Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0