பகவத் கீதை வெண்பா

அந்தவவன் றன்னையே யானாத வன்சரணாச்
சந்த முடனடைநீ தார்விசயா-முந்தவவன்
றன்னருளான் மேலான சாந்தியையுஞ் சாயாத
வன்பதமும் நீபெறுதி வாய்ந்து.           18.62

தார் விசயா

வெற்றிமாலை சூடிய அர்ஜுனா!

அந்த அவன் தன்னையே

அந்தப் பரமாத்மாவான என்னையே

சந்த முடன்

எல்லா வகையாலும்

நீ ஆனாத வன்சரணா அடை

நீ அழியாத வலிய உபாயமாக அடைவாய்

முந்த அவன் தன் அருளால்

மேலான அவனுடைய அருளாலே

நீ

நீ

மேலான சாந்தியையும்

எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுதலையையும்

சாயாத வன் பதமும்

அழியாத பரமபதத்தையும்

வாய்ந்து பெறுதி

நன்கு பெறுவாய்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top