பகவத் கீதை வெண்பா என்று நியதமா மிந்தக் கருமங்களொன்றும் விடவிவனுக் கொண்ணாதா- னின்றிவற்றை மோகத்தாற் றான்விடுதன் முக்குணத்திற் பிற்குணத்தி லாகத்தால் வந்த வது. 18.7 என்றும் நியதமாம் இந்தக் கருமங்கள் எப்போதும் அநுஷ்டிக்கவேண்டிய இந்த நித்ய நைமித்திக கர்மங்களில் ஒன்றும் எதுவும் இவனுக்கு மோக்ஷத்தை விரும்பும் இவனுக்கு விட ஒண்ணாதால் விடத்தகாததாகும் மோகத்தால் (கர்மம் குற்றமுள்ளது என்னும்) மயக்கத்தால் இவற்றை நின்று விடுதல் தான் இவற்றை அடியோடு விடுவது முக்குணத்தில் பிற்குணத்தில் ஆகத்தால் வந்த அது ஸத்வம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்றுகுணங்களில் பிற்பட்டதான தமோகுண ஸ்வரூபத்தால் விளைந்ததாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0