பகவத் கீதை வெண்பா பகவத்கீதை வெண்பா(பதினெட்டாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக்கூறும் பாசுரம்) தன்மைக் கருமந் தகுகுணத்தின் றூய்மையுட னன்மை பயில்சார நன்கறியத் – தொன்மைப்பரமனருள் கீதைப் பதினெட்டா மோத்தாஞ் சரமமுரைத் தோர்ந்ததிது தான். 18.78A தன்மைக்கருமம் மூவகைப் பரித்யாகத்துடன் செய்யப்படும் கர்மயோகம் மோக்ஷோபாயமாயிருக்கும் என்பதையும் தகுகுணத்தின் தூய்மையுடன் ஸத்வ குணம் தூயதாகையாலே கைக்கொள்ளத்தக்கது என்பதையும் நன்மை பயில் சாரம் கீதா ஸாஸ்த்ரத்தின் ஸாரமான பக்தி ப்ரபத்திகளே நன்மையளிப்பவை என்பதையும் நன்கு அறிய நன்றாக அறியும்படியாக தொன்மைப் பரமன் அருள் கீதை பதினெட்டாம் ஓத்தாம் சரமம் பழையோனான கிருஷ்ண பரமாத்மா அருளிய கீதையின் பதினெட்டாவது கடைசி அத்தியாயம் உரைத்து ஓர்ந்தது இது தான் உரைத்து நிச்சயித்தது இதுவேயாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0