பகவத் கீதை வெண்பா

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினெட்டாம் அத்தியாயம் முற்றிற்று.

த்ருதீய ஷட்கத்தின் ஸாரப்பொருள்

உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் – திடவசுரர்
தேவ ரியல்வுக்குணஞ் சேர்கருமஞ் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து.          18.78B

உடல் உயிரின் தன்மை

உடல் உயிர் ஆகியவற்றின் தன்மைகள்

உறு குணத்தின் பன்மை

உடலில் சேர்ந்திருக்கும் குணங்கள் மூன்றாயிருக்கை

இடரில் எழில் ஈசன் தன் ஏற்றம்

குற்றமற்ற நன்மைகளையுடைய ஈசனுடைய பெருமைகள்

திட அசுரர் தேவர் இயல்வு

(ஒவ்வொரு மனிதனை) உறுதியாகப் பற்றிநிற்கும் அசுரத்தன்மையும் தேவத்தன்மையும்

குணம் சேர் கருமம் சார்ந்து அமர்வும் ஆவன

குணத்துக்குத் தக்க கருமமுடைய நாலுவர்ணமும் ஆகியவற்றையும்

பின் ஆறு ஓத்து அமர்ந்து

கடைசியாக ஆறு அத்தியாயங்கள் கொண்ட த்ருதீயஷட்கம் கூறுகிறது

பகவத்கீதை வெண்பா- பின்னுரை (வாதிகேஸரி ஜீயர்)

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top