பகவத் கீதை வெண்பா தூயகரு மங்களினாற் சத்வமிக வுண்டாக்கி யேயவுணர் வாலுயிரி னீறறிந்து – மாயனிடை முத்தியுறுஞ் சிந்தை முயலாசை முன்பணியாற் பத்தியுறல் கீதைப் பயன். 18.78C தூய கருமங்களினால் புண்யகருமங்களால் சத்வம் மிக உண்டாக்கி ஸத்வ குணத்தை மிகவும் வளரும்படி செய்து ஏய உணர்வால் அதனால் உண்டான ஜ்ஞானத்தால் உயிரின் ஈறு அறிந்து ஆத்மாவுக்கு முடிவான பயனைத் தெரிந்துகொண்டு மாயனிடை எம்பெருமானிடம் முத்தி உறும் சிந்தை மோக்ஷத்தை விரும்பும் மனத்தோடும் முன் பணியால் முயல் ஆசை அவன் திருமுன்பே கைங்கர்யம் செய்வதில் விருப்பத்தோடும் பத்தி உறல் அவனிடம் அன்பு செலுத்துதல் கீதைப் பயன் கீதையைப் படித்ததின் பயனாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0