பகவத் கீதை வெண்பா

எவ்வறமுஞ் சொல்லி யிறுவாஞ் சுலோகத்தாற்
செவ்வறமாந் தன்சரணாச் செப்புதலா – லவ்வறத்துத்
தான்துணையா மாயன் றனித்துத் தனையளிக்கும்
வான்றுணையா மென்றிருத்தல் வாய்ப்பு.           18.78D

எவ்வறமும் சொல்லி

எல்லா மோக்ஷோபாயங்களையும் சொல்லி

இறுவாம் சுலோகத்தால்

('ஸர்வதார் மாந் பரித்யஜ்ய' என்று தொடங்கும்) சரம ஸ்லோகத்தால்

செவ்வறமாம் தன் சரணா செப்புதலால்

உண்மையான மோக்ஷோபாயம் தன்னைச் சரணடைவதே என்று கூறுகையால்

அவ்வறத்து

கர்ம ஜ்ஞான பக்தி யோகங்களாகிற மோக்ஷோபாயங்களிலும்

தான் துணையாம் மாயன்

தான் பலனளிப்பவனாயிருந்து கொண்டு உதவி புரியும் எம்பெருமான்

தனித்து

(அவ்வுபாயங்களில்லாவிடினும்) தான் தனியாகவே

தனை அளிக்கும்

(ஜீவாத்மாவுக்குத்) தன்னைக் கொடுக்கும்

வான் துணையாம்

பெரிய உபாயமாக இருப்பான்

என்று இருத்தல்

என்று நினைத்து இருப்பது

வாய்ப்பு

நல்லது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top