பகவத் கீதை வெண்பா

அறிவாங் கறியப் படுங்கன்ம மத்தை
யறிவான் விதிமூன்றோ டாகுஞ் – செறிவார்
கரணஞ்செய் கன்மமதிற் கர்த்தாவா மூன்றாங்
கரணஞ்செய் கன்மத் தடைவு.       18.18

விதி

(ஜ்யோதிஷ்டோமம் முதலான கர்மங்களைப் பற்றிய) வேதவிதி

அறிவு

(செய்யவேண்டிய கர்மத்தைப் பற்றிய) அறிவு

ஆங்கு அறியப்படும் கன்மம்

அறிந்து செய்யத்தக்கதான அந்தக் கர்மம்

அத்தை அறிவான்

(அந்தக் கர்மத்தை) அறிபவன்

மூன்றோடாகும்

(என்னும்) மூன்றோடும் கூடியிருப்பதாகும்

கரணம் செய் கன்மத்து அடைவு

இந்திரியங்களால் செய்யப்படும் கர்மத்தின் வகை

செறிவார் கரணம்

கர்மத்திற்கு உபகரணமாயிருக்கும் திரவியம் முதலானது

செய் கன்மம்

செய்யப்படும் அந்தக்கர்மம்

அதில் கர்த்தாவாம்

அந்தக் கர்மத்தைச் செய்பவன் என்று

மூன்றாம்

மூன்றாயிருக்கும்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top