பகவத் கீதை வெண்பா

செவ்வியுறுந் த்யானத்தின் சித்தியினைச் சேர்ந்தவவன்
எவ்வாறு தான்பிரம மெய்தினா – னவ்வாறு
சேர்ந்த வதினிலையாஞ் சித்தி யதுசுருக்க
மார்ந்தெனது பானீ யறி.           18.50

செவ்விஉறும் த்யானத்தின் சித்தியினைச் சேர்ந்த அவன்

சிறப்புற்ற த்யாந ஸித்தியை அடைந்தவன்

எவ்வாறு தான் பிரமம் எய்தினான்

எந்த உபாயத்தால் பிரம்மம் எனப்படும் ஆத்ம ஸ்வரூபத்தை அடைவானோ

அவ்வாறு

அந்த உபாயத்தையும்

சேர்ந்த அதின் நிலையாம் சித்தி அது

அவ்வுபாயத்திலிருந்து நிலையாகக் கிடைக்கும் ஸித்தியாகிற அந்தப் பிரம்மத்தையும்

எனது பால்

என்னிடமிருந்து

சுருக்க மார்ந்து

சுருக்கமாக

நீ அறி

நீ அறிவாயாக

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top