பகவத் கீதை வெண்பா ஓங்கு மகங் காரத்தி லுற்றே யுயர்சமரமீங்குமுய லேனென் றிருத்தியே – லாங்குநிறை மேவுந் துணிவதுவு மெய்யன்று தன்மையுனை யேவுஞ் சமரத்தி லேய்ந்து. 18.59 ஓங்கும் அகங்காரத்தில் உற்றே (எனக்கு நன்மை தீமைகளை நானே அறிவேன் என்னும் ) மிகுதியான அஹங்காரத்தை அடைந்து (என் வார்த்தையைக் கேளாமல்) உயர் சமரம் ஈங்கு முயலேன் என்று இருத்தியேல் சிறப்புடைய போரை இப்போர்க்களத்தில் செய்யமாட்டேன் என்று இருந்து விட்டாயானால் ஆங்கு நிறைமேவும் துணிவு அதுவும் உன்னிடத்தில் நிறைந்திருக்கும் அந்தத் துணிவும் மெய் அன்று பொய்யாகிப்போகும் தன்மை உன் சரீரம் உனை உன்னை சமரத்தில் போர்புரிவதில் ஏய்ந்து ஏவும் நன்கு தூண்டிவிடும் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0