பகவத் கீதை வெண்பா எல்லா வறங்களையு மிங்கறவிட் டென்னையே நல்லார் சரணமா நண்ணியிடு – தொல்லாரும்பாவங்க ணின்றுன்னைப்பற்றுவிடு விப்பனான் றாவந் தனையொழிநீ தான். 18.66 எல்லா அறங்களையும் எல்லா ஸாதநங்களையும் இங்கு அறவிட்டு இப்போது நன்கு கைவிட்டு என்னையே என்னையே நல் ஆர் சரணமா நல்ல நிறைந்த உபாயமாக நண்ணியிடு அநுஸந்திப்பாய் தொல் ஆரும் பாவங்கள் நின்று அநாதிகாலமாக நிறைந்திருக்கும் பாபங்களிலிருந்து நான் நான் உன்னை உன்னை பற்று விடுவிப்பன் தொடர்பு விட்டுப்போம்படி செய்வேன் நீ தான் நீ தாவம் தனை வருத்தத்தை ஒழி விட்டுவிடுவாய் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0