பகவத் கீதை வெண்பா

நாமிருவர் நின்றியம்பு நல்லறஞ்சே ரிக்கீதை
பாமருவி யோதும் பரிவனெனைத் தூமருவு
நெஞ்சறிவா மெச்சத்தா னேரே யிறைஞ்சினனென்
றெஞ்சலற யான்மதிப்ப னிங்கு.         18.70

நாம் இருவர் நின்று இயம்பும் நல்லறம் சேர் இக்கீதை

நாம் இருவரும் நின்று போர்க்களத்தில் பேசிக்கொண்டதாய் மோக்ஷோபாயங்கள் நிறைந்ததான இந்த கீதையின்

பா மருவி ஓதும் பரிவன்

ஸ்லோகங்களை மனமொன்றி ஓதும் பரிவுடையவன்

தூமருவு நெஞ்சறிவாம் எச்சத்தால்

தூய்மை பொருந்திய ஜ்ஞாந யஜ்ஞத்தாலே

எனை

என்னை

நேரே இறைஞ்சினன் என்று

நேரே ஆராதித்தான் என்று

யான்

நான்

இங்கு

இவ்வுலகில்

எஞ்சல் அற மதிப்பன்

குறைவற எண்ணுவேன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top