பகவத் கீதை வெண்பா மன்னவா கேசவனும் பாண்டவனும் வார்த்தையினைச் சொன்னவா நானினையுந் தோறெல்லா – மின்னவா றென்னவொண்ணா தற்புதமா யேல்கின்ற புண்ணியமாப் யன்னவுகப் பாவன் பயின்று. 18.76 மன்னவா திருதராஷ்ட்ர மஹாராஜனே! இன்னவாறு என்னவொண்ணாது அற்புதமாய் இப்படிப்பட்டது என்று சொல்லமுடியாதபடி ஆச்சர்யமாயிருப்பதாய் ஏல்கின்ற புண்ணியமாய் பாவனத்தன்மைப் பொருந்தியதான கேசவனும் பாண்டவனும் வார்த்தையினை சொன்னவா கேசவனும் பாண்டவனும் வார்த்தை பேசிய கலந்துரையாடலை நினையும் தோறெல்லாம் நினைக்கும் போதெல்லாம் நான் நான் பயின்று மறுபடியும் மறுபடியும் பன்ன உகப்பாவன் மிகவும் ஆனந்தமடைவேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0