பகவத் கீதை வெண்பா சொட்டை மணவாளத் தூய்முனிவன் சொற்செய்த சட்ட மருவுந் தமிழ்ப்பாவாற் – கட்டெழில்சீர்க் கோமா னருள்கீதை கூறும் பொருளுணர்வார் சீமா னடிசேர்வர் சென்று. 18.78G சொட்டை மணவாளத் தூய்முனிவன் சொற்செய்த சொட்டைக்குலம் எனப்படும் ஸடமர்ஷண கோத்திரத்தில் உதித்த அழகிய மணவாளச்சீயர் இயற்றிய சட்டம் மருவும் தமிழ்ப்பாவால் இலக்கண விதிகளுக்கு உட்பட்ட தமிழ்ப்பாட்டால் கட்டு எழில் சீர் கோமான அருள் கீதை கூறும் பொருள் உணர்வார் முழுவதும் அழகு நிறைந்த கண்ணனருளிய கீதை சொல்லும் பொருளை அறிபவர்கள் சீமானடி அந்த ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை சென்று அர்ச்சிராதிகதியாலே சென்று சேர்வர் சேர்வார்கள் ஸுதர்சனர் என அழைக்கப்படும் ஸ்ரீ. உ. வே. க்ருஷ்ண ஸ்வாமி ஐயங்கார் எழுதிய பதவுரையுடன் கூடிய பகவத்கீதை வெண்பா முற்றிற்று. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0