பகவத் கீதை வெண்பா நான்காம் அத்தியாயம்- ஞான (விபாக) யோகம் அத்தியாயப்பொருளின் சுருக்கம் நாராயணன்கீதை நாலாமோத் திற்றனது சீரார் பிறவிச் சிறப்புடனே – யேராரும் யோகத் துடன்கரும முற்றியலு மாறுரைக்கு மேகப் பலபரிசா வேய்ந்து. 4.0 நாராயணன் (கண்ணனாய் அவதரித்த) நாராயணன் கீதை நாலாம் ஓத்தில் கீதையின் நாலாம் அத்தியாயத்தில் தனது சீர் ஆர் பிறவி சிறப்புடனே பெருமை மிகுந்த தன் அவதாரச் சிறப்போடு கூட ஏர் ஆரும் யோகத்துடன் சிறப்புற்ற ஞானத்தோடு ஏகம் கருமம் ஒன்றான கருமம் பல பரிசா ஏய்ந்து பல வகைகளாக இருந்துகொண்டு முற்று இயலும் ஆறு (ஜ்ஞான யோகத்தை இடையிடாமலே) பரிபூர்ண ஸாதனமாயிருக்கும் வகையை உரைக்கும் உபதேசிக்கிறான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0