பகவத் கீதை வெண்பா ஐந்தாம் அத்யாயம்-ஐந்தாமத்தியாயம் அண்ண லருள்கீதை யஞ்சாமோத் துக்கருமந்திண்ண முணர்வதனைச் சேர்ந்தமைந்த – வண்ணமது சிந்தை தெளியத் தெளிவுற் றுரைக்குமதே முந்தை மறைநெறியை மூண்டு. 5.0 அண்ணல் ஸ்வாமியாகிற கண்ணன் அருள் அருளிச் செய்த கீதை கீதாஶாஸ்திரத்தின் அஞ்சாம் ஓத்து ஐந்தாம் அத்தியாயம் முந்தை மறை நெறியை மூண்டு பழையதான வேதமார்க்கத்தைப் பின்பற்றி கருமம் கர்ம யோகம் உணர்வு அதனை திண்ணம் சேர்ந்து அமைந்த வண்ணம் அது “நான் கர்த்தாவல்லன்” என்னும் அறிவோடு உறுதியாகச் சேர்ந்து பொருந்தியிருக்கும் தன்மையை சிந்தை தெளிய (அர்ஜுனனுடைய) மனம் தெளிவடையும்படியாக, தெளிவுற்று உரைக்குமதே மிக விளக்கமாகச் சொல்லுவதாகும். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0