பகவத் கீதை வெண்பா அப்புநதி யந்தமன மந்நிலைமை யப்பயனா யிப்புந்தி யால்வினையை யீடழித்தோர்- மெய்ப்புந்தி மீளா வகையுடைய மெய்ப்பயனை நண்ணுவரே மாளா வுயிரின் வழி. 5.16 அப்புந்தி முற்கூறிய ஆத்மதர்ஸனத்திலேயே உறுதி அந்த மனம் அதிலேயே ஈடுபட்ட நெஞ்சம் அந்நிலைமை அதின் பயிற்சியிலேயே நிலைநிற்கை அப்பயனாய் அது வாகிற பயன் ஆகியவற்றை உடையவர்களாய் இப்புந்தியால் இந்த ஆத்மஜ்ஞானத்தாலே வினையை முன் செய்த வினைகளை ஈடு அழித்தோர் அடியோடு அழித்தவர்கள் மாளா மெய்ப்புந்தி உயிரின் வழி அழிவில்லாத உண்மையறிவையுடைய ஆத்மாவை அடைதலாகிற மீளா வகை உடைய என்றும் திரும்பிவருதலில்லாத மெய்ப் பயனை உண்மைப்பயனை நண்ணுவரே அடைவர். Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0