பகவத் கீதை வெண்பா ஏற்ற மிகும்யோகி யியல்கருமப் பேறுவிடுத் தாற்ற னிலைமை யடைந்தியலு – மூற்றமில்லாக் காமத்தா னநதக் கருமப் பலனசையாந் தாமத்தாற் கட்டுண்ணுந் தான். 5.11 ஏற்றம் மிகும் யோகி சிறப்பு நிறைந்த ஆத்மாவில் ஈடுபடுபவன் இயல் கருமப் பேறு விடுத்து செய்யும கர்மத்துக் குரிய சுவர்க்கம் முதலான பயன்களை விட்டு ஆற்றல் நிலைமை ஆறியிருக்கும் நிலையை (நிலையான ஆத்மாநுபவத்தை) அடைந்து பெற்று இயலும் இன்புறுவான் ஊற்றம் இலா காமததான் தான் ஆத்மாவில் ஈடுபாடற்று மற்ற விஷயங்களில் விருப்பமுள்ளவன் அந்த கருமப்பலன் நசையாம தாமத்தால் அந்தக் கர்ம பலன்களில் ஆசை யாகிற கயிற்றினால் கட்டுண்ணும் ஸம்ஸாரத்தில் கட்டுப்படுவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0