பகவத் கீதை வெண்பா ஆங்கொருவன் றீவினையு நல்வினை யும்பெரியோன்பாங்கினிற் றான்வாங்கும் பண்பிலனா-லீங்கறிவுமாய வினையான் மறைந்தன்று மோகததிலாய வுயிர்க ளவை 5.14 பெரியோன் பல இடங்களில் பரவக்கூடிய இந்த ஜீவன் ஆங்கு (தனக்கு வேண்டியவர்களாகவும் வேண்டாதவர்களாகவும் நினைக்கப்படுமவர்கள் நிறைந்த) உலகில் ஒருவன் தீவினையும் (வேண்டியவனாக நினைக்கப்படும்) ஒருவனுடைய துக்கத்தையும் (ஒருவன்) நல்வினையும ( வேண்டாதவனாக நினைக்கப்படும்) ஒருவனுடைய ஸுகத்தையும் தான் பாங்கினில் வாங்கும் பண்பு இலனால் தான் பக்குவமாகப் போக்கும் தன்மையை உடையவனல்லன் ஈங்கு இவ்வுலகில் அறிவு (ஜீவனுடைய) அறிவு மாயவினையால் ஆச்சர்யமான புண்யபாபங்களால் மறைந்தன்று – மறைக்கப்பட்டுள்ளது அவை அப்புண்யபாப கர்மங்களால் உயிர்கள் (தேவர் முதலான சரீரங்களிலுள்ள) ஜீவர்கள் மோகத்தில் ஆய (தேஹாத்ம மயக்கம் முதலான) மயக்கங்களில் ஆழ்ந்துள்ளன Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0