பகவத் கீதை வெண்பா அறிவாராஞ் சாங்கியருக் காகுபயன் கன்மச் செறிவாராம் யோகியர்க்குச் சேரும்-நெறியாலே யொன்றெனவே சாங்கியமும் யோகமது முன்னினவ னன்றெனவே கண்டா னலம். 5.5 அறிவாராம் சாங்கியருக்கு ஜ்ஞாநயோகத்தில் நிற்கும் சாங்கியருக்கு ஆகு பயன் உண்டாகும் (ஆத்மதர்ஸனமாகிற) பலன் கன்மச்செறிவாராம் யோகியர்க்குச் சேரும் கர்மயோகத்தில் ஈடுபடும் யோகிகளுக்கும் உண்டாகும் நெறியாலே ஒன்றெனவே (இவ்வண்ணமாகப்) பலத்தாலே ஒன்றுபட்டவை என்றே உன்னினவன் ஜ்ஞாநயோகத்தையும்,கர்மயோகத்தையும் அறிந்தவன் நலம் நன்றெனவே கண்டான் உபாயபலங்களை உள்ளபடி உணர்ந்தவனாவான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0