பகவத் கீதை வெண்பா

ஏழாவது அத்யாயம்- விஜ்ஞானயோகம்

பூர்வமத்யமஷட்கார்த்த ஸங்கதி

முன்னாறு நல்லுணர்வின் முற்றுங் கருமத்தால்
தன்னார் உயிருணர்வு தானுரைத்துப்-பின்னார்வத்
தேறு மனத்தா லிறைவன்பா லன்புசெயல்
கூறு நடுவாறுங் கூர்ந்து.   7.0A

முன் ஆறு

முதல் ஷட்கத்தினால் (ஆறு அத்தியாயங்களால்)

நல் உணர்வின் முற்றும் கருமத்தால்

(ஆத்மாவைப்பற்றிய) உண்மையறிவினால் நிறைவடையும் கர்மயோகத்தால்,

தன் ஆர் உயிர் உணர்வு தான் உரைத்து

தனது அருமையான ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸாக்ஷாத்காரம் உண்டாவதைக் கூறி

பின்

அதன்பலனாக

ஆர்வம் தேறு மனத்தால்

அன்பு நிறைந்த நெஞ்சினால்

இறைவன் பால் அன்பு செயல்

ஸர்வேஸ்வரனிடம் பக்தி செலுத்துவதாகிற பக்தியோகத்தை

நடு ஆறும்

(கீதை யின்) நடுவிலுள்ள ஆறு அத்தியாயங்களும்

கூர்ந்து கூறும்

விரிவாக விளக்கும்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top