பகவத் கீதை வெண்பா

எல்லாப் பொருளு மிறுதியினைக் கூடியே 
நில்லாத காலத்து நிற்குமதாய்ச் – சொல்லார்ந்த
வக்கரமாய் நின்றபொரு ளாங்கசித்தின் மேலாகி
மிக்கபெரு நுண்மையதாம் வேறு.            8.19

எல்லா பொருளும்

காரணகாரியங்களோடு கூடிய எல்லா மஹாபூதங்களும்

இறுதியினை கூடியே

அழிவை அடைந்து

நில்லாத காலத்து

நிலைநில்லாமற்போகும் ப்ரளயகாலத்தில்

நிற்குமதாய்

(அவற்றினுள்ளிருக்கும் போதும்) அழியாததாய்

சொல்லார்ந்த அக்கரமாய் 

‘அக்ஷரம்' என்று ஸாஸ்த்ரங்களில் சொல்லப்படுவதாய்

ஆங்கு அசித்தின் மேலாகி

முற்கூறிய அசேதனப்பொருளைக் காட்டிலும் மேலானதாய்

வேறு(ஆகி)

வேறுவகைப்பட்ட தாய்

மிக்க பெரு நுண்மையதாம்

மிகுந்த பெருமைபெற்று ( ஒரு ப்ரமாணத்தாலும் முழுவதும் அறியமுடியாதபடி ) ஸூக்ஷ்மமானதாயிருக்கும் (முக்தஸ்வரூபம்) 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top