பகவத் கீதை வெண்பா தூமமிராய் பிற்பக்கஞ் சோராமற் றென்னயன மாமதன்மேற் சந்திரனை யாங்கணைந்து – போமவன்றான் நல்வினையிற் சேர்பயன நாடணைந்து மீளுமே மல்வினையிற் சார்பால் மறிந்து. 8.24 தூமம் புகை இரா இரவு பிற்பக்கம் அபர(க்ருஷ்ண)பக்ஷம் தென் அயனம் தக்ஷிணாயநம் ஆம் அதன்மேல் சந்திரனை ஆங்கு அணைந்து முற்கூறியவற்றுக்கு மேல் சந்திரனை அவ்வழியில் அடைந்து சோராமல் போம வன்தாள் களைப்படையாமல் போகின்றவன் நல்வினையின் சேர் பயனாம் புண்ய கர்ம ஸம்பந்தத்தின் பலமாயிருக்கும் நாடு அணைந்து ஸ்வர்க்கலோகத்தை அடைந்து மல் வினையின் சார்பால் எஞ்சிய கர்மத்தின் தொடர்பால் மறிந்து மீளுமே மறுபடியும் கர்மபூமிக்கே வந்து சேர்வான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0