பகவத் கீதை வெண்பா

வெளிதுகரி தாயிருமை மேவியுல கேய்ந்த 
வளியநெறி யாங்கவற்றி லொன்றாற் – றெளிவமரு
மீளாப் பதமணையு மிக்கதனான் மீண்டுவருங்
கோளாறு தானணையுங் கூர்ந்து .            8.25

வெளிது கரிதாய் இருமை மேவி

வெள்ளை வழி கரிய வழி என (முறையே) இரு பெயர்களைப் பெற்று

உலகு ஏய்ந்த அளிய நெறி ஆங்கு அவற்றில்

(முறையே) ஞானிகளுக்கும் புண்ணியம் செய்தவர்களுக்கும் பொருந்திய நிலையான வழிகளான அவ்விரண்டு வழிகளில்

ஒன்றால்

ஒன்றான அர்ச்சிராதிகதியாலே

தெளிவு அமரும் மீளாப் பதம் ஆணையும்

தெளிவு பொருந்தியதாய் ஸம்ஸாரத்திற்குத் திரும்புதலில்லாத பரமபதத்தை (ஜீவன்) அடைவான்

மிக்கதனால்

மற்றொரு வழியான தூமாதி மார்க்கத்தாலே (சென்றவன்)

மீண்டு வரும் கோளாறுதான்

கர்மபூமிக்குத் திரும்பி வரும் துன்பத்தையே

கூர்ந்து அணையும்

பொருந்தி அடைவான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top