பகவத் கீதை வெண்பா

பகவத்கீதை வெண்பா 
(எட்டாம் அத்தியாயத்தின் ஸாரத்தைக் கூறும் பாசுரம்)

இவ்வாறு மாய னெழிற்கீதை யெட்டாமோத்
தவ்வா றருளி யமைபொருள்கள் – செவ்வாறா
ஞானத் தமர்ந்து நலஞ்சிறந்த நன்மைசேர்
மானப் படமுடிந்த வாய்த்து.            8.27A

இவ்வாறு

இவ்விதமாக

மாயன்

கண்ணனுடைய

எழில் கீதை

அழகிய கீதையின்

எட்டாம் ஒத்து

எட்டாம் அத்தியாயத்தில்

அவ்வாறு அருளி

முன் பாசுரங்களில் சொல்லியபடி ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்தி ஜ்ஞாநி ஆகியவர்களைப் பற்றிய விஷயங்களையெல்லாம் அருளி 

அமை பொருள்கள்

பொருந்தி நிற்கும் அர்த்தங்கள்

செவ்வாறா

செம்மையான வழியிலே

நலம் சிறந்த

சிறந்த பயன்களைப் பெற்றுத் தரும்

ஞானத்து அமர்ந்து

(எம்பெருமானுடைய வைபவத்தைப் பற்றிய) அறிவிலே முடிவடைந்து

நன்மை சேர் மானப்பட

சிறப்புடைய ப்ரமாணங்களை யொட்டியதாய்

வாய்த்து

பொருத்தமாக

முடிந்த

முடிவுற்றன 

வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் எட்டாம் அத்தியாயம் முற்றிற்று 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top