பகவத் கீதை வெண்பா

எவ்வகையா லிவ்வுடல்விட் டேகுங்கா னன்னெஞ்சின் 
மெய்வகையார் நின்னினைக்க மேவுதியென் – றிவ்வகையாற்
பார்த்தனவன் கேட்ட படிக்கேற்க வாங்கடைவே
வார்த்தையருள் செய்தான்மைம் மால்.     8.2

நல் நெஞ்சின் மெய் வகையார்

நல்ல நெஞ்சை யுடையராகையாலே உண்மையான இயல்வையுடையவர்கள்

இவ்வுடல் விட்டு ஏகுங்கால்

(தத்தம் பயனைப் பெறுவதற்குறுப்பாக) இவ்வுடலை விட்டுப் போம்போது

எவ்வகையால் நின் நினைக்க மேவுதி

(அவர்களால்) எவ் வகையில் நீ நினைக்கத்தக்கவனாயிருக்கிறாய்?

என்று இவ் வகையால்

என்று இவ்வண்ணமாக

பார்த்தனவன் கேட்ட படிக்கேற்க

அர்ஜுனன் கேட்ட கேள்விகளுக்குப் பொருந்தும்படியாக

ஆங்கு அடைவே

அதே முறையில்

மை மால்

அஞ்சன வண்ணனான கண்ணன்

வார்த்தை அருள் செய்தான்

பதில் வார்த்தைகளை அருளிச்செய்தான் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top