பகவத் கீதை வெண்பா

எட்டாம் அத்யாயம்-அப்யாஸயோகம்

அத்தியாயப் பொருளின் சுருக்கம் 

போக முயிருண்மை பூமகள் கோனைப்பெறுதற்
காக முயல்வார்க் கறிவமர , மேகநிறத் 
தெம்மா னருள்கீதை யெட்டாமோத் திற்பொருள்கள்
செய்ம்மா வகையுரைக்குஞ் சேர்ந்து .       8.0

போகம்

ஐஸ்வர்ய போகங்கள்

உயிருண்மை

ப்ரக்ருதியினின்றும் நீங்கிய ஆத்மாநுபவம்

பூமகள்கோனை

ஸ்ரீமந் நாராயணன் ஆகிய இம்மூன்று ப்ராப்யங்களில் ஒன்றை

பெறுதற்காக

பெறுவதற்காக

முயல்வார்க்கு

முயற்சி செய்பவர்களுக்கு

அறிவு அமர வகை

அறியவேண்டியவைகளையும்

செய் மா வகை

அநுஷ்டிக்க வேண்டியவைகளையும்

மேகநிறத்து எம்மான் அருள் கீதை எட்டாம் ஓத்தில் பொருள்கள்

மேகம் போன்ற நிறத்தையுடைய எம்பெருமானான கண்ணன் அருளிய கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் ஸ்லோகங்கள்

சேர்ந்து உரைக்கும்

ஒன்றுகூடிச் சொல்லும் 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top