பகவத் கீதை வெண்பா தாவமது செய்வேனான் பார்த்தா தடுத்துமழை மேவவது தன்னை விடுவேனான்-சாவவிடாத் தெள்ளமுது நானே செறுங்கூற் றமுநானே யுள்ளதில் தானதுநா னுற்று. 9.19 பார்த்தா குந்தீ புதரனே! நான் நான் தாவம் அது செய்வேன் (அக்நி ஸூர்யன்முதலானவற்றை ஸரீரமாகக் கொண்டு) வெப்பத்தையளிக்கிறேன் நான் நான் மழை தடுத்து (கோடையில் கிரணம் முதலானவற்றால்) மழையை இழுத்துக் கொண்டு அது தன்னை மேவ விடுவேன் (மழை காலத்தில் வருணன் மேகம் முதலானவற்றை ஸரீரமாகக் கொண்டு) அந்த மழையைப் பொழிவேன் நானே நானே சாவவிடாத தௌ்ளமுது உலகினரை அழியாமல் காக்கும் தாரகப் பொருள்களாயிருப்பவன் நானே நானே செறும் கூற்றமும் உலகினரை அழிக்கும் பாதகப் பொருள்களாகவும் இருப்பவன் உற்று அந்தர்யாமியாய் இருந்து உள்ளது நிகழ் காலத்திலுள்ள பொருள்களாகவும் இலதானது மற்ற காலங்களிலுள்ள பொருள்களாகவுமிருப்பவன் நான் நானே Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0