பகவத் கீதை வெண்பா

செய்யுமது முண்பதுவுஞ் செந்தீயி லோமத்தாற் 
பெய்யுமதுந் தானமெனப் பேசுமது-மெய்யுணா்வா
லுற்ற தவமுமவை யென்பா லுடனிருத்தி
மற்றதனிற் றெத்தைநீ மாற்று.       9.27

செய்யுமதும்

(உலகில் வாழ்வதற்காக) செய்யப்படும் லௌகிக காரியத்தையும்

உண்பதுவும்

(உயிர் வாழவதற்காகச் செய்யப்படும்) உண்ணும் காரியத்தையும்

(வேதங்களில் சொன்னபடி) செந்தீயில் ஓமத்தால பெய்யுமதும்

யாகாக்னியில் ஹோமம் செய்வதும்

தானம் எனப் பேசுமதும

தானம் என்று சொல்லப்படும் காரியமும்

மெய்யுணர்வால் உற்ற தவமும்

(ஆத்ம பரமாத்மாக்களைப் பற்றிய) உண்மையறிவோடு செய்யப்படும் தவமாகிற காரியமும்

அவை

ஆகிய இவையனைத்தையும்

என்பால்

என்னிடம்

உடன் இருத்தி

ஸமர்ப்பித்து

மற்றதனில்

முற்கூறியவற்றில்

தொத்தை

(உனக்கும் மற்றவர்களுக்கும் உள்ளதாக நீ மயங்கும்) தொடர்பை

நீ மாற்று

நீ மாற்றிக் கொள்வாயாக 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top