பகவத் கீதை வெண்பா நானிவ் வுலகெல்லா நான்பரந்தங் குட்கரந்து தானியலு மேனியனாய்த் தான்றரிப்ப-னான்மையா லென்னாற் றரித்திருக்கு மெப்பூ தமுமவற்றின் மன்னாது நானிருப்பன் மற்று. 9.4 இவ்வுலகெல்லாம் (சேதனம் அசேதனம் என்று இரு வகைப்பட்ட) இவ்வுலகனைத்தும் உட்கரந்து தான் இயலும் மேனியனாய் உள்ளே மறைந்து அந்தரியாமியாய் விளங்கும் ஸ்வரூபத்தை உடையவனாய் நான் தான் பரந்து தரிப்பன் நானே தான் வியாபித்து தரிப்பேன் ஆனமையால் இக்காரணத்தால் எப்பூதமும் எந்தப் பொருளும் எனனால் தரித்திருக்கும் என்னால் தரிக்கப்பட்டிருக்கும நான் மற்று அவற்றில் மன்னாது இருப்பன் நானோவெனில் அவற்றால் தாங்கப்படாதவனாயிருப்பேன் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0