பகவத் கீதை வெண்பா எந்தவுல குக்கு மிறையாகு மென்பெருமை சந்தமதி னின்றுணா்வு சாராதார்- மந்தராய் மானிடமா மிவ்வுடலில் வந்துதித்த வென்னையது தானிடமா நின்றிகழ்வா் தாம். 9.11 மந்தராய அறிவிலிகளாய் எந்த உலகுக்கும் இறையாகும் என பெருமை சந்தமதில் நின்று உணா்வுசாராதார் எல்லாப் பொருள்களுக்கும் இறைவனாயிருக்கும் என்னுடைய பெருமையைத் தங்கள் நெஞ்சில நிறுத்தி அறிவு பெறாதவாகள் மானிடமாம் இவ்வுடலில் வந்து உதித்த என்னை மனித உருப்போலிருக்கும் இந்த உருவோடு அவதரித்திருக்கும் என்னை அதுதான் இடமா அதுவே காரணமாக நின்று இகழ்வர்தாம் நிலையாக வந்து அவமதிக்கிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0