பகவத் கீதை வெண்பா பொன்னகரில் வாழவெய்திப் புண்ணியத்தின் றன்குறையைப்பன்னின வரிவ்வுலகிற் பாடழிந்தே-பின்னடைவர்காக்குமறைத் தன்மைக் கதியடைந்தார் காமத்தாற் போக்குவரத் தேபெறுவா் பூண்டு. 9.21 பொன்னகரில வாழவெயதி ஆசைப்படத்தக்க ஸ்வர்க்கலோகத்தில அநுபவங்களை அடைந்து புண்ணியத்தின் தன் குறையைப் பன்னினவா (அங்கிருக்கும்போதும ஸவர்க்காநுபவத்திற்குக் காரணமான) புண்ணியம் குறைவதை அநுஸந்தித்து வருந்துகின்றவர்களாய் பின் பாடு அழிந்தே கடைசியில புண்ணியம் முழுவதும் அழிந்தவுடன் இவ்வுலகில் அடைவர் இந்த மனுஷ்யலோகத்தில் (பிறவியை) அடைகிறார்கள் காக்கும் மறை தன்மை கதி அடைந்தார ( வேதாந்த ஜ்ஞாநமில்லாதவர்களாய் யாகம் முதலானவற்றால்) ரக்ஷிக்கும் வேதங்களில் சொன்ன தர்மங்களை அநுஷ்டிப்பவர்களாய் காமத்தால் (அவற்றில் சொன்ன ஸவர்க்காதிகளில்) விருப்பத்தால் பூண்டு போக்குவரத்தே பெறுவர் (அல்பமும் அஸ்திரமுமான) ஸவர்க்காதிகளையே அடைந்து மறுபடியும் மறுபடியும் திரும்பிவருகிறார்கள் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0