பகவத் கீதை வெண்பா

ஆங்கனைத்து வேள்விக்கு மாராத் தியனானே 
பாங்கதனி னானே பலங்கொடுப்பே – னீங்கென்னை
யிவ்வா றறியா ரிதனாலத் தத்துவத்தின் 
அவ்வா நழுவுவா்சார் வற்று.       9.24

ஆங்கு

வேதத்தில் சொல்லப்படும்

அனைத்து வேள்விககும

எல்லா யாகங்களுக்கும்

ஆராத்தியன் நானே

ஆராதிக்கப்படுபவன் நானே

அதனில்

அவ்வேள்விக்ளுக்கு

நானே

நானே

பாங்கு பலன் கொடுப்பேன்

நன்றாகப் பலன் கொடுப்பேன்

ஈங்கு

இவ்விஷயத்தில்

என்னை

என்னை

இவ்வாறு அறியார்

இவ்வண்ணம் (உள்ளபடி) அறியாதவர்கள்

இதனால்

இதனால்

அத் தத்துவத்தின் சார்வற்று

முற்கூறிய மோக்ஷத்தை அடையாமல்

அவ்வா(று) நழுவுவர்

21 வது ஸ்லோகத்தில் சொன்னபடி நழுவும் பலன்களையே பெறுவர்

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top