பகவத் கீதை வெண்பா

ஒன்பதாம் அத்யாயம்- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

உன்னப் படும்பர னொண்சீர் மருவுயர்த்தி
மன்னப் பயில்ஞான வாசிதான் – றன்னமர்ந்து
நின்றியலும் பத்தி நிகழ்ந்துரைத்த நற்கீதை
யொன்றியசீ ரொன்பதா மோத்து.       9.0

உன்னப்படும்

உபாஸிக்கப்படும் 

பரன்

பரமாத்மாவினுடைய 

ஒண்சீர் மருவு

ஸௌலப்ய ஸௌஸீலயங்களோடு கூடிய

உயாததி

மேன்மையை

மன்னப பயில்ஞானி வாசி தான்

எப்போதும் சிந்திக்கும் ஞானியின் சிறப்போடு

தன அமர்ந்து நின்று இயலும் பத்தி

தனனிடத்தில் பொருந்தி நிலையாக உபாஸிப்பதாகிற

பக்தியோகத்தை நல் கீதை சீர் ஒன்றிய ஒன்பதாம் ஓத்து

நல்ல கீதையின் சிறப்புப் பொருந்திய ஒன்பதாம் அத்தியாயம்

நிகழ்ந்து உரைத்த

நன்கு உரைத்தது 

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top