கீதார்த்தசங்க்ரஹம் एकान्तात्यन्त- दास्यैकरतिस्तत्पदमाप्नुयात् । तत्प्रधानमिदं शास्त्रमिति गीतार्थसङ्ग्रहः । ३२ ॥ ஏகாந்தாத்யந்த தா3ஸ்யைக ரதிஸ் தத்பத3மாப்நுயாத் | தத்ப்ரதா4 நமித3ம் ஶாஸ்த்ரமிதி கீ3தார்த்த2 ஸங்க்3ரஹ: || ஏகாந்தாத்யந்த தா3ஸ்யைக ரதி: எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக்கொண்டதாய், எல்லாக்காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி, தத்பத3ம் (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை, ஆப்நுயாத் அடைவான்; இத3ம் ஶாஸ்த்ரம் இந்த கீ3தா ஶாஸ்த்ரம். தத்ப்ரதா4நம் சேதனனைப் பரமைகாந்தியாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது இதி இவ்வண்ணமாக, கீ3தார்த்த2 ஸங்க்3ரஹ: கீ3தையின் பொருளைச் சுருக்கிக்கூறும் ‘கீ3தார்த்த2 ஸங்க்3ரஹம்’ என்னும் நூல் நிறைவுபெறுகிறது. Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0