கீதார்த்தசங்க்ரஹம்

ஸ்ரீமத் பகவத்கீதா ஸார ஸங்க்ரஹம்

37. மேலே யெடுத்த *அவரம் பவதோ ஐந்ம* என்கிற அர்ஜுந ப்ரச்நமான ச்லோகத்திற்கு பாஷ்யம் செய்யாநின்ற சங்கராசார்யரும் மத்வாசார்யரும் வாளா சென்றார்கள். நம் ஸ்வாமி யெம்பெருமானார் இங்கு தமது பாஷ்யத்தில் விசேஷ சர்ச்சை செய்தருளுகிறார். கண்ணபிரானை நோக்கி அர்ஜுநன் இப்படி கேள்வி கேட்டிருக்கிறானே, இது ஸம்பாவிதமான கேள்வியாக இல்லை. ஏனெனில்; அர்ஜுநனானனவன் கண்ணபிரானை வெறும் இடைப்பிள்ளையாக நினைத்திருக்கிறானா? அல்லது ஸாக்ஷாத் பரமபுருஷனாக நினைத்திருக்கிறானா? என்பதை முன்னம் விமர்சித்து முடிக்க வேண்டும். கேவலம் இடைப்பிள்ளையாகவே நினைத்திருந்தானாகில் இங்ஙனம் கேள்விகேட்க ஒளசித்யமுண்டு. ஸாக்ஷாத் பரம புருஷனாகவே நினைத்திருக்கிறா னென்று தேறுமாகில் இங்ஙனம் கேள்வி கேட்க இடமே கிடையாது; பரமபுருஷன் எப்போது முள்ளவனாகையாலே அவன் விவஸ்வானுக்கு உபதேசிப்பதில் அஸம்பவ மொன்று மில்லையாகையாலே 'அவரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:' என்று வாய் திறக்கவே வழியில்லை. ஆகவே அர்ஜுநன் கண்ணனை கேவலம் இடைப்பிள்ளை யாகவே கொண்டு இங்ஙனம் கேள்வி கேட்டிருக்கிறானென்று கொள்ளவேணும். இது முன்பின் ஸந்தர்ப்பங்களுக்கு அடியோடு ஒவ்வாது. தர்மபுத்ரருடைய ராஜஸூயாதிகளில் பீஷ்மர்போல்வாரிடத்தில் "க்ருஷ்ண ஏவ ஹி லோகாநாமுத்பத்திரபி சாப்யய:, க்ருஷ்ணஸ்ய ஹி க்ருதே பூதமிதம் விச்வம் சராசரம்." இத்யாதிகள் பலவும் கேட்டிருக்கிறானர்ஜுனன். மேலே பத்தாவது அத்யாயத்தில் இவ்வர்ஜுநன் தானே கண்ணபிரானை நோக்கி "பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் அஸிதோ பவான், ஆஹுஸ்த்வாம் ருஷயஸ்ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா, தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே." என்று கூறுகிறான். கண்ணன் பரமபுருஷனென்பதைப் பலரிடத்தில் பலகால் தான் கேட்டிருப்பதாக ஸ்பஷ்டமாகக் கூறியுள்ளான். இப்படி யிருக்கும்போது அவரம் பவதோ ஜந்ம என்கிற கேள்வி உதிக்க ப்ரஸக்தியே கிடையாது என்பதை ஸ்வாமி உபபாதித்துக் காட்டியுள்ளார். அஸம்பாவிதமான ப்ரச்நம் எப்படி தோன்றிற்று? என்னில்; இதற்கு ஸமாதானமும் ஸ்வாமி வெகு பொருத்தமாக அருளிச் செய்துள்ளார்; அதை உபபாதிக்கிறோம் கேண்மின்.

38. இங்கு ஸ்வாமியின் கீதாபாஷ்ய ஸூக்தி பரமரஸகனமாகையாலே கண்ட பாடம் செய்து தரிக்கப்படவேண்டு மென்பதற்காக அதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம்:-"அத்ரோச்யதே, ஜாநாத்யேவாயம் பசுவந்தம் வஸுதேவ ஸூநும் பார்த்த:, ஜாநதோபி அஜாந்த இவ ப்ருச்சத: அயமாசய: ; நிகிலஹேய ப்ரத்யநீககல்யாணைகதாநஸ்ய ஸர்வேச்வரஸ்ய ஸர்வஜ்ஞஸ்ய ஸத்யஸங்கல்பஸ்ய அவாப்தஸமஸ்த காமஸ்ய கர்மபரவசதேவமநுஷ்யாதி ஸஜா தீயம் ஜந்ம கிமிந்த்ரஜாலா திவத்மித்யா? உத ஸத்யம் ? ஸத்யத்வே ச கதம் ஜந்மப்ரகார:? கிமாத்மகோயம் தேஹ: ? கச்ச ஜந்மஹேது:? கதா ச ஐந்ம? கிமர்த்தம் ச ஜந்ம? இதி பரிஹார ப்ரகாரேண ப்ரச்நார்த்தோ விஜ்ஞாயதே." என்பது கீதாபாஷ்ய பங்க்திகள். இவற்றின் ஸாரமான கருத்து என்னவென்றால் அர்ஜுநன் கண்ணபிரானை ஸாக்ஷாத் பரமபுருஷனாகவே தான் உறுதி கொண்டிருக்கிறான். அப்படியிருந்தும் அவனது பெருமையை அறியாதவன்போல் கேள்விகேட்டிருப்பது ஏனென்னில், மேலே கண்ணபிரான் இவனுக்கு விடை கூறுகின்ற ப்ரகாரங்களை நோக்குமிடத்து, அர்ஜுநன் என்ன அபிப்ராயங்கொண்டு இக்கேள்வி கேட்டிருக்கிறானென்பதை எளிதாக நிர்ணயிக்கலாம். மேலே பகவான் நாலைந்து ச்லோகங்களாலே விடை கூறுவதில், தன்னுடைய அவதாரம் இந்திரஜாலாதிகள் போலே அஸத்யமன்று, ஸத்யமே யென்பதையும், தன்னுடைய அவதாரப்ரகாரத்தையும், திவ்யமங்கள விக்ரஹத்தின் தன்மையையும், அவதார ஹேதுவையும், அவதாரகாலத்தையும், அவதார ப்ரயோஜநத்தையும் அருளிச் செய்திருக்கிறான். இவையெல்லாம் அப்ருஷ்டோத்தரமாகக் கூடாது. அர்ஜுநன் கேளாத அம்சங்களுக்குக் கண்ணன் விடை கூறுவதாகத் தேறினால் அது மிகவும் அஸமஞ்ஜஸமாகும். இத்தனையும் அர்ஜுநனுடைய உள்ளத்திலுறைந்தவை; அவன் கேள்வி கேட்கத் தொடங்கினபோதே இவ்வளவும் இவன் கேட்க நினைத் திருக்கிறானென்று கண்ணபிரான் தெரிந்துகொண்டு அவனை வாயடக்கி தான் விரிவாக விடையிறுக்கிறான். “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி" என்ற அடுத்த வாக்யமொன்றோடே கண்ணன் தன் விடையை முடித்திருக்கவேண்டுமே.. இல்லையாகில், அப்பா அர்ஜுநா! நீ நினைக்கிறபடி நான் இப்போதாகப் பிறந்தவனல்லேன்: அநாதி காலமாகப் பல பிறப்பும் பிறந்து கொண்டிருக்கிறேன். ஆகவே முன்னொரு பிறப்பில் விவஸ்வானுக்கு உபதேசித்தே னென்பது அஸம்பாவிதமன்று காண்’ என்று இவ்வளவே யன்றே சொல்லி முடித்திருக்கவேண்டும். அப்படியில்லையே. இதற்கு மேலுள்ள விஷயங்களைச் கொல்லுவதற்கு என்ன ப்ரஸக்தி யென்று பார்க்க ம் வேணுமே. பார்க்குமளவில், அர்ஜுநன் இவ்வளவையும் அறிந்து கொள்ள விரும்பியே அக்கேள்வி கேட்கத் தொடங்கினானென்பது அநாயாஸ லப்யமாகும் என்பது எம்பெருமானார் திருவுள்ளம்.

39. மேல் சலோகமானது (45) “பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந” என்றுள்ளது. இதனால் பசுவானுடைய அவதாரம் இந்த்ரஜாலாதிகளைப் போல் அஸத்யமன்று, ஸத்யந்தா னென்பது தெரிவிக்கப்பட்டதாகிறது. இங்கே; தேசிகனுடைய தாத்பர்யசந்த்ரிகையில் நன்கு விளக்கமுள்ளது. "ஸத்யத்வே ஹி ஹுத்வா தீநி ஸ்வரஸாநி, ஜந்மாநீதி சோக்தம், ந ஜந்மப்ர திபாஸா இதி; தவ சேதி அப்ருஷ்டஸ்யார்த்தஸ்யோபா தாநமபி ஏதத்ஸத்யத்வத்ருஷ்டாந்த பிப்ராயமந்த ரேண ந கடதே. ந ஹ்யர்ஜுநஸ்ய ஜந்ம மித்த்யா......." இத்யாதி தாத்பர்ய சந்த்ரிகா ஸூக்திகள் காண்க. இதில் முக்கியமான விஷயம்-"அர்ஜுநா ! எனக்கும் உனக்கும் பல ஜன்மங்கள் கடந்திருக்கின்றன' என்கிறான் கண்ணன். ஜன்மங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதேயொழிய ஜன்மப்ரதிபாஸங்களென்று சொல்லப் பட்டிருக்கவில்லை. தவிரவும், அர்ஜுநனுடைய ஜன்மத்தைப் பற்றி ப்ரஸ்தாவிக்க வேண்டுவது அப்ரஸக்தமாயிருக்க 'தவ சார்ஜுந' என்று அவனுடைய பிறப்புக்கள் த்ருஷ்டாந்தமாக வெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. 'அப்பா! உன் பிறப்பு எப்படி ஸத்யமோ அப்படியே என் பிறப்பும் ஸத்யங்காண்' என்று தெரிவிக்கப்பட்டதாகத் தேறுகின்றது. இதற்கடுத்த (46) "அஜோபி ஸந்நவ்யயாத்மா பூதா நாமீச்வரோபிஸந், ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்ட்டாய ஸம்பவாம்யாத்மமாயயா," என்கிற ச்லோகத்தினால்—அவதார ப்ரகாரமும், அவதாரங்களில் பரிக்ரஹிக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தின் உண்மைத் தன்மையும் அவதார ஹேதுவுமாகிற மூன்று விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அஜத்வம் அவ்யயத்வம் ஸர்வேச்வரத்வம் ஆகிற இந்த பரமேச்வரத் தன்மையை விடாமலே பிறக்கிறேனென்கையாலே அவதாரப்ரகாரம் சொல்லிற்று. "ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி” என்று, அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹத்தையே கொண்டு அவதரிப்பதாகச் சொல்லுகையாலே திவ்யமங்கள விக்ரஹத்தின் உண்மைத் தன்மை சொல்லிற்று. இனி 'ஆத்மமாயயா' என்றதைப்பற்றிக் கீழேயே மிக விரிவாக நிரூபணம் செய்திருக்கிறோம். என்னுடைய ஸங்கல்பத்தினாலேயே அவதரிக்கிறேனென்று பொருளாகையாலே இச்சைதான் அவதாரஹேது வென்று சொல்லிற்றாயிற்று. இதற்கடுத்த (4–7.) யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத, அப்ப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம் யஹம்.” என்கிற ச்லோகத்தினால் அவதாரகாலம் சொல்லிற்று.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top