பகவத் கீதை

न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ २ ॥
ந மே வீது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய: |
அஹமாதிர் ஹி தேவாநாம் மஹர்ஷீணாஞ்ச ஸர்வச: ||     10.2

தேவர்களுக்கும் மஹரிஷிகளுக்கும் அறிவு, ஆற்றல்களை அளிப்பவன் நானே; அவர்களின் ஞான சக்திகள் அளவு பட்டவை. ஆதலால் அவர்களும் என்னை உள்ளபடி அறிய முடியாது.

மனிதர்களால் அறிய முடியாதவைகளை தேவர்களும் ரிஷிகளும் அறியக் கூடியவர்களே ஆனாலும் அவர்களது அறிவும் ஆற்றலும் அளவுபட்டிருக்கும். அவை என்னாலேயே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவை; அதைக் கொண்டு மட்டும் அவர்கள் என் ஸ்வரூப ரூப குணங்களை உள்ளபடி அறிய இயலாது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top