பகவத் கீதை

अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्‍ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥ ५ ॥
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ் தபோ தாநம் யசோzயச: |
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா: ||     10.5

புத்தி மோஹமின்மை, பொறுமை சத்தியம், வெளிப்புலனை யடக்குதல், மனத்தை அடக்குதல், சுகம் துக்கம், பிறப்பு, இறப்பு, பயம் பயமின்மை, அஹிம்ஸை, மனத்தின்நடுநிலை, திருப்தி, தானம், தபஸ், புகழ்ச்சி இகழ்ச்சி போன்ற பலவிதமான குணங்கள் எல்லா ஜீவன்களுக்கும் என்னிடமிருந்து உண்டாகின்றன.

புத்தி என்றால் நுண்ணறிவு; ஜ்ஞாம் -ஆத்ம பரமாத்ம அறிவு, அசம்மோஹம் -மனத்தெளிவு; க்ஷமை - பொறுமை; சுகம் துக்கம் - இன்ப துன்பங்கள். நாம் விரும்புவது கிடைத்தால் சுகம், இன்பம்; கிடையாவிடில் துன்பம், சத்தியம் -கேட்டதை உள்ளபடி பேசுதல்; பிறர்க்குத் துன்பமில்லாமல் பேசுதலும் சத்தியமே; தமம்-மெய், வாய், கண், மூக்கு, செவி இவ்வைம்புலன்களை அடக்குதல். சமம் - மனம், புத்தி, அஹங்காரம் இவைகளின் அமைதி. அஹிம்சை - ஓர் உயிருக்கும் இன்னா செய்யாமை. ஸமதா- விருப்பு வெறுப்புகளில் சமநிலை. துஷ்டி - என்றால் சந்துஷ்டி, திருப்தி, தபஸ் - புலனடக்குதல்; தானம் -தனக்குப் பயன்படும் பொருளை பிறர்க்கு உகந்து அளித்தல்; யச அயச - புகழ்ச்சி இகழ்ச்சி.

இவைகளை யெல்லாம் அவரவர் வினைப்பயனுக்குத் தக்கபடி பகவான் அளிக்கிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top