ஏழு மாமுனிவர்களும், நான்கு மனுக்களும் முன்னம் ப்ரஹ்மாவின் மனத்திலிருந்து உண்டானார்கள். இவர்கள் என் ஆணைக்கு உட்பட்டவர்கள்; என் எண்ணத்தைப் பின்பற்றியே நடப்பவர்கள். உலகிலுள்ள எல்லா மனிதர்களும் இவர்கள் வம்சத்தில் (பரம்பரையில்) உண்டானவர்களே.
ப்ருகு, மரீசி, அத்ரி, புலகர், அம்பரீஷர், க்ரது, புலஸ்தியர் என்னும் ஏழு ரிஷிகளும், சுவாரோசிஷர், சுவாயம்பு, ரைவதர், உத்தமர் என்கிற நான்கு மனுக்களும், நான்முக ப்ரஹ்மாவின் உள்ளத்திலிருந்து உண்டானவர்கள். அவர்கள் என் ஸங்கல்பத்தை (நினைவை) யொட்டியே நடப்பவர்கள். இவர்கள் வம்சத்திலேயே எல்லா மனிதர்களும் தோன்றியுள்ளனர்.