பகவத் கீதை

अर्जुन उवाच –
परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् ।
पुरुषं शाश्वतं दिव्यमादिदेवमजं विभुम् ॥ १२॥
பரம் ப்ரஹ்ம பரந்தாம பவித்ரம் பரமம் பவாந் |
புருஷம் சாச்வதம் தீவ்யம் ஆதிதேவம் அஜம் விபும் ||     10.12

அர்ஜுன உவாச -அர்ஜுனன் கூறுகிறான்.

க்ருஷ்ணா! உம்மை பரப்ரஹ்மம் என்றும், பரஞ்சோதி என்றும், பரிசுத்தன் என்றும் சுருதிகள் கூறுகின்றன; உலகத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் இவைகளுக்குக் காரணமாயுள்ள பரஞ்சோதி நீரே ஆகிறீர். தன்னைப் பற்றினாரின் பாபங்களைப் போக்கி, ஸம்ஸார பந்தத்தை அறுத்திடும் பரப்ரஹ்மமும் நீரே, பகவானிடம் பக்தி செய்பவரின் பாபங்கள், "போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்". நாராயணனே பரம் ப்ரஹமம், பரஞ்சோதி, பவித்ரம், பரமம் என்று வேதம் கோஷிக்கிறது.

கண்ணா! உன்னை உள்ளபடி அறிந்த ரிஷிகள், உன்னை நித்தியனாகவும், என்றும் இருப்பவன், அழிவில்லாதவனாகவும், பரம புருஷனாகவும். படைத்தல் காத்தல் அழித்தல் இவைகளுக்கு ஸர்வ காரணனாகவும், (நன்மைப்போல் கர்மத்தினால்) பிறப்பில்லாத வனாகவும், எங்கும் நிறைந்தவனாகவும் சொல்லுகிறார்கள். நீயும் அவ்வண்ணமே உன்னைச் சொல்லிக் கொள்ளுகிறாய்.

இவ்வாறு வேதங்களும், ரிஷிகளும், சொல்வதையே நீயும் உன்னைப்பற்றி சொல்வதால் இவையெல்லாம் உண்மை என்றே நான் நம்புகிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top