எனது கருணையினாலேயே நான் அவர்கள் உள்ளத்தில் வீற்றிருந்து, பிரகாசிக்கிற ஜ்ஞாந ஒளியினால் அஜ்ஞானமான இருளைப் போக்குகிறேன்.
அநுகம்பார்த்தம் - அவர்களின் நன்மைக்காகவே தன் அருளினால் அவர்கள் இதயத்தில் இருந்தவாறு தன் கல்யாண குணங்களை வெளிப்படுத்துகிறான். இதனால் அவர்களுக்கு பகவத் ஜ்ஞானம் உண்டாகிறது. அதனால் அஜ்ஞான இருளினால் அவர்களுக்குள்ள உலக விஷய விருப்பங்கள் மாய்கின்றன; பகவானிடம் அன்பு (பக்தி) உண்டாகிறது.