பகவத் கீதை

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम् ।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते ॥ १०॥
தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம் |
ததாமி புத்தியோகம் தம் யேந மாம் உபயாந்தி தே ||     10.10

எப்பொழுதும் என்னுடன் கூடியிருப்பதையே பயனாக விரும்பி, என்னிடம் பக்தி செய்பவர்களுக்கு, நானே அதற்குண்டான பரி பக்குவத்தைச் செய்து தருகிறேன்.

பக்தி என்பது பகவானிடம் செய்யும் அன்பு, இது பரபக்தி, பரஜ்ஞானம், பரமபக்தி என்று மூன்றுவித நிலையாக இருக்கும். பரமபக்தி நிலையைப் பெற்ற பின்னரே பகவானை அடைவதான மோக்ஷம் கிட்டும்.

மூன்றாம் சுலோகம் முதல் எட்டாம் சுலோகம் வரை பக்தி உண்டாகும் உபாயத்தைச் சொன்னான். அதற்கு மேலே அது பரபக்தி பரஜ்ஞானமாக வளர்ந்த ஜ்ஞானியின் நிலையைச் சொன்னான். அவர்கள் எப்படித் தன்னை எப்போதும் நினைத்து தரித்திருப்பர் என்பதையும் பிறகு சொன்னான். இவர்களின் பக்தியை பரமபக்தியாக, தானே வளரச் செய்வதாகக் கண்ணன் கூறுகிறான்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top