பகவத் கீதை

मच्चित्ता‍ मद्गतप्राणा भजतां बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥ ९ ॥
மச்சித்தா மத்கதப்ராணா: போதயந்த: பரஸ்பரம் |
கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ||     10.9

என் பக்தர்கள், தங்கள் சித்தத்தை என்னிடமே வைத்திருப்பர். தங்கள் பிராணனையும் என்பால் செலுத்தியிருப்பர். ஒருவருக்கொருவர் பேசும்போதும் என் குணங்களையே கூறி என் கதைகளையே கேட்டு மகிழ்ந்திருப்பர்.

அதாவது தனித்திருக்கையில் என்னையே நினைத்திருப்பர்; என்னை நினையாவிடில் தரிப்பில்லாமல் என்னிடமே அவர்கள் பிராணனை வைத்திருப்பர். மற்றவரிடம் கலந்துரையாடும் போதும் என் குணங்களையே வெளியிட்டு, என் கதைகளையே கேட்டு மகிழ் வுறுவர்.

தாங்கள் அனுபவிக்கும் என் தெய்வத் திருமேனியையும், எனது கல்யாண குணங்களையும், என் விந்தைச் செயல்களையும் பிறர்க்கு ஒரு பயனையும் விரும்பாமல் சொல்லி, ஆனந்தம் அடைவர்; கேட்பவரும் அன்புடன் அவைகளைக் கேட்டு, மகிழ்ந்திருப்பர்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top